இந்தியா

பசுவும், பாம்புவும் ஒன்றாக விளையாடிய வீடியோ வைரல்

Published On 2023-08-05 12:45 IST   |   Update On 2023-08-05 12:45:00 IST
  • பசுவும், பாம்புவும் ஒன்றாக விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
  • பசுமாடு தனது நாக்கால் பாம்பை உச்சிமுகர்வது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் பசுவும், பாம்புவும் ஒன்றாக விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் ஒரு பாம்பு படம் எடுத்து எழுந்து நிற்கிறது. அதன் அருகே ஒரு பசுமாடு பாம்பை நட்புடன் முகர்ந்து பார்க்கிறது. அந்த பாம்புவும் பயப்படாமல், மாட்டின் அருகே செல்கிறது.

அப்போது அந்த பசுமாடு தனது நாக்கால் பாம்பை உச்சிமுகர்வது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவுடன் சுசந்தா நந்தாவின் பதிவில், தூய அன்பின் மூலம் பெற்ற நம்பிக்கை இதை விளக்குவதும் கடினம் என குறிப்பிட்டிருந்தார். பதிவிடப்பட்ட சில மணி நேரத்திலேயே 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான விருப்பங்களையும் வீடியோ பெற்றுள்ளது.

Tags:    

Similar News