இந்தியா

நொய்டா இரட்டை கோபுரம் தகர்ப்பு- கவுண்ட் டவுன் தொடங்கியது

Published On 2022-08-28 08:55 GMT   |   Update On 2022-08-28 09:17 GMT
  • நொய்டாவில் விதி மீறி கட்டப்பட்ட சூப்பர் டெக் என்ற இரட்டை கட்டடங்களை இடிக்க முடிவு.
  • பிற்பகல் 2.30 மணிக்கு கட்டடம் தரைமட்டமாக்கப்ப உள்ளது.

டெல்லி அருகே நொய்டாவில் விதி மீறி கட்டப்பட்ட சூப்பர் டெக் என்ற இரட்டை கட்டடங்களை இடிக்க கவுண்ட் டவுன் தொடங்கி உள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு கட்டடம் தரைமட்டமாக்கப்படவுள்ள நிலையில் 30 நிமிட கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது.

இறுதி உத்தரவுகளை அளிக்க அதிகாரிகள் மற்றும் இடிக்கும் பணியை நடத்தும் நிறுவன பிரதிநிதிகள் தயாராக உள்ளன. சிசிடிவி கேமராக்கள் மூலம் அதிகாரிகள் மற்றும் போலீசார் இரட்டைக் கட்டட தகர்ப்பை கண்காணித்து வருகின்றனர்.

இடிபாடுகளை தாங்கிக் கொள்ளும் வகையில் இரட்டைக் கோபுரம் அருகே பல இடங்களில் 12 அடி பள்ளம் வெட்டப்பட்டுள்ளது. இரட்டைக் கட்டடம் அமைந்துள்ள பகுதியில் இருந்து நாய், பூனை உள்ளிட்ட கால்நடைகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வெடிக்க வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News