இந்தியா

மணமக்கள் ஹெலிகாப்டரில் செல்ல காத்திருந்த காட்சி.

ஆந்திராவில் தாலிகட்டியதும் ஹெலிகாப்டரில் மாமியார் வீட்டுக்கு சென்ற மணப்பெண்

Published On 2023-03-11 09:36 IST   |   Update On 2023-03-11 09:36:00 IST
  • மகள், மருமகனை விஜயவாடாவிற்கு அனுப்பி வைக்க தனியார் ஹெலிகாப்டர் ஒன்றை துவாரக நாத் ஏற்பாடு செய்து இருந்தார்.
  • திருமண சடங்குகள் முடிந்த பிறகு நேற்று மாலை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மணமக்களை ஹெலிகாப்டரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் முக்குல துவாரக நாத். இவர் நகர்ப்புற வளர்ச்சி கழக தலைவராக உள்ளார்.

இவரது மகள் உஷா ஸ்ரீ. இவருக்கும் விஜயவாடாவை சேர்ந்த பிரசாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் மாலை நெல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திருமண மண்டபத்தில் குவிந்து இருந்தனர். பாட்டுக் கச்சேரி ஆடல் பாடலுடன் வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது.

இதையடுத்து நேற்று காலை மணமகன் பிரசாந்த் மணமகள் உஷா ஸ்ரீ கழுத்தில் தாலி கட்டினார்.

பின்னர் தனது மகள், மருமகனை விஜயவாடாவிற்கு அனுப்பி வைக்க தனியார் ஹெலிகாப்டர் ஒன்றை துவாரக நாத் ஏற்பாடு செய்து இருந்தார்.

அதன்படி திருமண சடங்குகள் முடிந்த பிறகு நேற்று மாலை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மணமக்களை ஹெலிகாப்டரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அவர்கள் விஜயவாடா சென்றதும் மணமகன் வீட்டார் ஆரத்தி எடுத்து அழைத்து சென்றார்.

பாசமான தனது மகளை மாமியார் வீட்டிற்கு தந்தை ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News