இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக கறுப்பு கொடி போராட்டம்

Published On 2022-10-27 15:34 IST   |   Update On 2022-10-27 15:34:00 IST
  • குப்பை கிடங்குகள் தொடர்பாக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோஷங்கள் எழுப்பினார்கள்.
  • ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் எதிர்கோஷம் போட்டனர்.

டெல்லியில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநகராட்சி தேர்தல் நடை பெற உள்ளது. இதனால் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும். பாரதீய ஜனதா கட்சியும் தலைநகரில் எப்படியும் வெற்றி வாய்ப்பை பெற வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

டெல்லியை பொறுத்த வரை குப்பை கிடங்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனை பாரதீய ஜனதா கட்சி கையில் எடுத்துள்ளது. காசிப்பூர் பகுதியில் பெரிய அளவிலான குப்பை கிடங்கு உள்ளது. இதனை இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட வந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியினர் கறுப்பு கொடிகளுடன் அங்கு திரண்டனர்.

குப்பை கிடங்குகள் தொடர்பாக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் எதிர்கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News