இந்தியா

வளர்ப்பு சிறுத்தைகளுடன் உக்ரைனில் தவிக்கும் ஆந்திர டாக்டர்

Published On 2022-10-03 05:40 GMT   |   Update On 2022-10-03 08:30 GMT
  • உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் தங்கள் நாய்கள் மற்றும் பூனைகளை அன்புடன் அழைத்து வந்ததாக பல கதைகள் உள்ளன.
  • நான் இல்லாத நேரத்தில் என் செல்ல சிறுத்தைகள் பட்டினியால் சாவதை நான் விரும்பவில்லை.

திருப்பதி:

உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் தங்கள் நாய்கள் மற்றும் பூனைகளை அன்புடன் அழைத்து வந்ததாக பல கதைகள் உள்ளன.

இருப்பினும், ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது 2 செல்லப் பிராணிகளான சிறுத்தை மற்றும் கரு சிறுத்தையை விட்டுச் செல்ல விரும்பாததால் உக்ரைனில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்து வருகிறார்.

ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனுகு நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கிரிகுமார் அவர் உக்ரேனிய தலைநகர் கீவில் இருந்து 850 கிமீ தொலைவில் உள்ள டான்பாஸில் வசிக்கிறார்.

கிரிகுமார் மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் சென்று சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இப்போது டான்பாஸில் மருத்துவப் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

சிறுவயதிலிருந்தே செல்லப்பிராணிகளை ஆசையுடன் வளர்த்து வருகிறார். கிரிகுமார் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் இருந்து ஈர்க்கப்பட்டு அன்றில் இருந்து 2 சிறுத்தைகளை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகிறார்.

அவர் 4 தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார், அவை இன்னும் வெளியாகவில்லை, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய டி.வி. தொடர்களிலும், 2 உக்ரேனிய திரைப்படங்களிலும் சில கெஸ்ட் தோற்றங்களில் நடித்துள்ளார்.

யூடியூபரான கிரிகுமார், தனது சிறுத்தைகளை வீடியோ பதிவேற்றி, அவைகளுடன் உலா வருகிறார். "எனது செல்ல பிராணியான சிறுத்தைகளை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பதால் நான் உக்ரைனை விட்டு வெளியேற விரும்பவில்லை," என்று அவர் கூறியுள்ளார்.

ஏராளமான தெலுங்கு மாணவர்களும் மற்றவர்களும் இந்தியாவிற்கு வெளியேற்றுவதற்காக அருகிலுள்ள எல்லையை பாதுகாப்பாக அடைய உதவி செய்கிறார்.

நான் அண்டை நாட்டிற்கு தப்பிச் செல்வதன் மூலமோ அல்லது இந்தியாவுக்குத் திரும்புவதன் மூலமோ குண்டுவெடிப்பில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால் நான் இல்லாத நேரத்தில் என் செல்ல சிறுத்தைகள் பட்டினியால் சாவதை நான் விரும்பவில்லை."

வீட்டில் இருக்கும் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை பாதுகாப்பாக இருக்க நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

கிரிகுமார் தனது செல்லப்பிராணிகள் தனது குடும்ப உறுப்பினர்களைப் போன்றவர்கள் என்றும் அவற்றை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

"நான் அவைகளை கைவிட்டால், நிச்சயமாக இறந்துவிடும். என்னால் அதைத் தாங்க முடியாது, நான் அவைகளை என் கடைசி மூச்சு வரை பார்த்துக்கொள்வேன், நான் இறந்தால், அவைகளுடன் சேர்ந்து இறந்துவிடுவேன்," என்று அவர் தனது வலைப்பதிவில் கூறியுள்ளார்.

தற்போது அவர் போலந்தில் உள்ளார்.

Similar News