இந்தியா

650 மில்லி தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.350- டுவிட்டரில் வைரலான இளம்பெண்ணின் பதிவு

Published On 2023-07-12 09:40 IST   |   Update On 2023-07-12 09:40:00 IST
  • 650 மில்லி கொண்ட ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.350 வசூலிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்திருப்பதோடு தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

நமக்கு பிடித்த ஓட்டல்களுக்கு சென்று உணவு சாப்பிடும் போது செலவு அதிகரிப்பது இயல்பானது. நல்ல உணவுக்காக கூடுதல் செலவு செய்யவும் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். அதே நேரம் சில பொருட்களின் விலை தரத்தை விட அதிகமாக இருக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அந்த வகையில் 650 மில்லி கொண்ட ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.350 வசூலிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ரித்திகா போராஹ் என்ற இளம்பெண் உயர்தர உணவகம் ஒன்றில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

'நீங்கள் நம்ப மாட்டீர்கள், மதிய உணவுக்காக உயர்தர உணவகத்துக்கு சென்றபோது 650 மில்லி கொண்ட தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.350 கட்டணமாக விதித்தனர். எனவே நான் தண்ணீர் பாட்டிலை வீட்டிற்கு எடுத்து செல்ல திட்டமிட்டேன், ஏனென்றால் அதை மீண்டும் உபயோகிக்கலாம்'. இந்த சம்பவம் எனக்கு மட்டும் தான் நடந்துள்ளதா? அல்லது உங்களுக்கும் நிகழ்ந்துள்ளதா? என கேட்டுள்ளார். மேலும் தனது பதிவில் தண்ணீர் பாட்டிலின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் நேச்சுரல் மினரல் வாட்டர் என்றும் இமாலயன் கிங்டம் ஆப் பூடானில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 10-ந் தேதி பகிரப்பட்ட இந்த பதிவை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்திருப்பதோடு தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News