இந்தியா

திருப்பதி கோவிலில் 35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை- 5 பேர் கைது

Published On 2023-05-19 05:14 GMT   |   Update On 2023-05-19 05:59 GMT
  • தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 750 லட்டுகளை திருடி எடுத்துச் சென்றனர்.
  • 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரை கைது செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தரிசனம் முடிந்து களைப்புடன் வரும் பக்தர்கள் லட்டு கவுண்டர்களிலும் நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள்.

இதனை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலையில் வெளியே விற்பனை செய்து வருகின்றனர்.

லட்டு தயாரிக்கும் இடத்தில் இருந்து தட்டுகளில் லட்டுகளை அடுக்கி கன்வேயர் பெல்ட் மூலம் பிரசாத விற்பனை கவுண்டர் அருகே கொண்டு செல்லப்படுகிறது.

அங்கிருந்து தள்ளுவண்டிகள் மூலம் பிரசாத கவுண்டர்களுக்கு லட்டு எடுத்துச் செல்கின்றனர்.

இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இடையில் லட்டுகளை திருடி விற்பனை செய்வதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் லட்டு எடுத்துச் செல்லும் பணியை கண்காணித்தனர்.

அப்போது தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 750 லட்டுகளை திருடி எடுத்துச் சென்றனர். அவர்களை கையும் காளவுமாக பிடித்தனர்.

மேலும் அவர்கள் இதுவரை 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் வேறு யாராவது ஈடுபட்டு உள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News