இந்தியா

தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள்.

மது போதையில் ஆற்றில் இறங்கிய 3 வாலிபர்கள் மரணம்- புதிய கார் வாங்கி பார்ட்டி வைத்தபோது சோக சம்பவம்

Published On 2023-03-04 09:49 IST   |   Update On 2023-03-04 09:49:00 IST
  • மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு கிருஷ்ணா நதிக்கரையில் மது அருந்தினர்.
  • மதுபோதையில் கிருஷ்ணா நதியில் இறங்கி 3 பேரும் குளித்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் காலேசா அலியாஸ் (வயது 30). இவர் விஜயவாடாவில் ஓட்டல் நடத்தி வந்தார்.

இவரது நண்பர்கள் அஜித் சிங் நகரை சேர்ந்த ரஹிம் பாஷா (30), கஸ்தூரிபா பேட்டையை சேர்ந்த கிரண் (37). காலேசா அலியாஸ் புதிய கார் ஒன்றை வாங்கினார்.

புதிய கார் வாங்கியதற்கு பார்ட்டி கொடுப்பதாக கூறி தனது நண்பர்களை காரில் அழைத்துக் கொண்டு பெனமலூர் மாவட்டம், சோட வரத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு கிருஷ்ணா நதிக்கரையில் மது அருந்தினர். பின்னர் மது போதையில் கிருஷ்ணா நதியில் இறங்கி 3 பேரும் குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

இதனை கண்ட அந்த பகுதி மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 3 பேரின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து தண்ணீரில் மூழ்கிய காலேசா அலியாஸ், ரஹீம் பாஷா ஆகியோரின் பிணங்களை மீட்டனர். கிரண் உடலை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News