இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 3 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Update: 2022-08-10 06:08 GMT
  • சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளில் லத்தீப் ராதர் மிகவும் முக்கியமானவன்.
  • பாதுகாப்பு படை வீரர்களால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான அவன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளான்.

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் வாட்டர்ஹெய்ல் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர் ஆவார்கள்.

சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளில் லத்தீப் ராதர் மிகவும் முக்கியமானவன். காஷ்மீர் பண்டிட்டுகளான ராகுல் பட், அம்ரீன் பட் உள்பட பல பொதுமக்களை சுட்டுக் கொன்றவன் ஆவான். பாதுகாப்பு படை வீரர்களால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான அவன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளான்.

Tags:    

Similar News