தினசரி பாதிப்பு 2-வது நாளாக உயர்வு- இந்தியாவில் புதிதாக 227 பேருக்கு கொரோனா
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 198 பேர் மீண்டுள்ளனர்.
- இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 163 ஆகவும், நேற்று 201 ஆக இருந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 77 ஆயிரத்து 106 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 198 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 3,424 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 27 அதிகம் ஆகும்.
தொற்று பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,693 ஆக உயர்ந்துள்ளது.