இந்தியா

169 பேருக்கு புதிதாக தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

Published On 2023-02-28 11:41 IST   |   Update On 2023-02-28 11:41:00 IST
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 140 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 343 பேர் குணமடைந்துள்ளனர்.
  • ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 218 ஆக இருந்தது. நேற்று 185 ஆக குறைந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பாதிப்பு குறைந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.

மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 140 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 343 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த எண்ணிக்கை நேற்றை விட இன்று 28 அதிகரித்துள்ளது. அதாவது 2,257 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் புதிய உயிரிழப்பு இல்லை. அதேநேரம் கேரளாவில் விடுபட்ட பலிகளில் ஒன்றை கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,771 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News