இந்தியா

பேனா நினைவுச் சின்னத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Published On 2023-07-10 09:26 GMT   |   Update On 2023-07-10 09:26 GMT
  • மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
  • பேனா நினைவுச் சின்ன திட்டத்தை ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

புதுடெல்லி:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி கொடுத்துள்ளது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து விரைவில் கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். பேனா நினைவுச் சின்ன திட்டத்தை ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற மனுக்களை பொதுநல மனுவாக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News