இந்தியா

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை

Published On 2025-06-29 12:43 IST   |   Update On 2025-06-29 12:43:00 IST
  • கள்ளக்காதலை கைவிட வேண்டும் என பலமுறை எச்சரிக்கை விடுத்தனர்.
  • நிர்வாணப்படுத்தி இரும்பு கம்பத்தில் கட்டி வைத்து வெந்நீரை ஊற்றி சித்ரவதை செய்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஹனுமகொண்டா, தர்மசாகர் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இது குறித்து இளம் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் கள்ளக்காதலை கைவிட வேண்டும் என பலமுறை எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து வைத்து அறிவுரை வழங்கினர். இருப்பினும் இளம்பெண் வாலிபருடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களது உறவினர்கள் நேற்று இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்து சரமரியாக தாக்கினர்.

பின்னர் அவரை நிர்வாணப்படுத்தி இரும்பு கம்பத்தில் கட்டி வைத்து வெந்நீரை ஊற்றி சித்ரவதை செய்தனர். மேலும் இளம்பெண் மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு மொட்டை அடித்தனர்.

இதுகுறித்து சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை மீட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் உறவினர்கள் 5 பேரை கைது செய்தனர்.

இளம் பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News