இந்தியா
சத்தீஸ்கரில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
- பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டு நடமாட்டம் இருந்ததை தொடர்ந்து தேடுதல் வேட்டை.
- பாதுகாப்புப்படை வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால், பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது. இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டு அதிகமான இடங்களில் பாதுகாப்புப்படையினர், போலீசார் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.