இந்தியா

மணி அடித்தால் மட்டுமே கடைகள் திறக்க வேண்டும்- ஆந்திராவில் வினோத பழக்கம்

Published On 2025-07-23 11:27 IST   |   Update On 2025-07-23 11:27:00 IST
  • கடைகளைத் திறக்க புதிய விதிமுறை ஒன்றை வியாபாரிகள் கடைபிடித்து வருகின்றனர்.
  • மணி அடிப்பதற்காக ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பொடிலி, படூர் நகரப் பகுதியில் கடைகளைத் திறக்க புதிய விதிமுறை ஒன்றை வியாபாரிகள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி அங்குள்ள 60 வயது முதியவர் ஒருவர் தினமும் காலை 8 மணிக்கு மணி அடிக்கிறார்.

அதன் பிறகுதான் அங்குள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறக்கிறார்கள். இந்த பாரம்பரியம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த நேரத்தில் மணி அடிப்பதற்காக பிரம்மய்யா என்ற ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் இன்னும் இந்த பணியை செய்து வருகிறார்.

பிரம்மய்யா கடைவீதிகளில் மணி அடித்துக் கொண்டு செல்வதை வெளியூர்க்காரர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

Tags:    

Similar News