இந்தியா

பிரதமர் மோடி 

மூவர்ணக் கொடியுடன் எடுத்த புகைப்படத்தை பகிருங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Update: 2022-08-13 16:48 GMT
  • மத்திய அமைச்சர்கள், திரையுலகினர் தேசிய கொடி ஏற்றினர்.
  • பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.

நாட்டின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி இல்லம் தோறும் மூவண்ணக் கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.

இதையடுத்து மத்திய அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், விஜய் உள்பட பிரபலங்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினர்.

மேலும் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர். இது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இல்லம் தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்திற்கு கிடைத்த அற்புதமான பதிலில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த இயக்கத்தில் பல்வேறு தரப்பு மக்களின் சாதனைப் பங்கேற்பைப் பார்க்கிறோம். விடுதலை அமிர்தப் பெருவிழாவை குறிக்க இது ஒரு சிறந்த வழியாகும். மூவண்ணக் கொடியுடன் உங்கள் புகைப்படத்தையும் hargartiranga.com என்ற இணையதளத்தில் பகிரவும் என்றும் தமது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

Tags:    

Similar News