1 கிமீக்கு 425 ரூபாய்: இணையத்தில் பேசுபொருளான பெங்களூரு ஆட்டோ கட்டணம்
- ஊபர் செயலியில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்கு ரூ.425 காட்டப்பட்டது.
- கார் பயணத்திற்கு தோராயமாக ரூ.364 விலை நிர்ணயிக்கப்பட்டது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்களின் செயல்கள் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்கள் வெளியாவது உண்டு.
அவ்வகையில் பெங்களூருவில் மழைக்காலங்களில் ஆட்டோ பயணங்களுக்கு அதிக பணம் வசூலிப்பதாக இணையத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.
அந்த பதிவில், ""நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது, என் நண்பர் ஒரு ஆட்டோவை முன்பதிவு செய்ய முயன்றார். அப்போது ஊபர் செயலியில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்கு ரூ.425 காட்டப்பட்டது. அதே நேரத்தில் கார் பயணத்திற்கு தோராயமாக ரூ.364 விலை நிர்ணயிக்கப்பட்டது. இது குறுகிய கால பயணத்திற்கு மிகவும் விலை உயர்ந்தது. இதை பார்த்தவுடன் அவர் உடனடியாக, அவர் ஒரு குடையை எடுத்துக்கொண்டு நடந்து சென்றார்" என்று தெரிவித்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக அதிகப்படியான ஆட்டோ கட்டணங்கள் தொடர்பான விவாதம் இணையத்தில் சூடுபிடித்துள்ளது.