இந்தியா

கர்நாடகத்தில் இதுவரை ரூ.174 கோடி தங்க, வெள்ளி பொருட்கள் பறிமுதல்

Published On 2023-04-18 09:14 IST   |   Update On 2023-04-18 09:14:00 IST
  • கர்நாடகத்தில் சட்டசபை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
  • தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,490 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் சட்டசபை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.71 கோடியே 93 லட்சத்து 1 ஆயிரத்து 992 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.18 கோடியே 87 லட்சத்து 69 ஆயிரத்து 240 மதிப்புள்ள பரிசு பொருட்களும், ரூ.38 கோடியே 74 லட்சத்து 59 ஆயிரத்து 97 மதிப்புள்ள மதுபானமும், ரூ.15 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 261 மதிப்புள்ள போதைப்பொருளும், ரூ.29 கோடியே 43 லட்சத்து 1 ஆயிரத்து 885 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.174 கோடியே 10 லட்சத்து 21 ஆயிரத்து 476 மதிப்புள்ள ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,490 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 68 ஆயிரத்து 113 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர். 20 துப்பாக்கிகளின் உரிமங்கள் ரத்த செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News