இந்தியா
null

லடாக்கில் ராணுவ வாகனம் மீது பாறை விழுந்து விபத்து - 2 வீரர்கள் உயிரிழப்பு

Published On 2025-07-31 00:49 IST   |   Update On 2025-07-31 01:13:00 IST
  • மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
  • லெப்டினன்ட் கர்னல் பானு பிரதாப் சிங் மன்கோடியா மற்றும் லான்ஸ் கார்போரல் தல்ஜித் சிங் ஆவர்.

கிழக்கு லடாக்கில் சாலையில் ஒரு பெரிய பாறை விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரு லெப்டினன்ட் கர்னல் உட்பட இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

கல்வானில் உள்ள துர்பக் அருகே உள்ள சர்பாக்கில் புதன்கிழமை காலை 11.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இராணுவ வாகனத் தொடரணியின் ஒரு பகுதியாக அவர்கள் ஜீப்பில் பயணித்தபோது பாறை விழுந்து விபத்து ஏற்பட்டது.

இறந்தவர்கள் லெப்டினன்ட் கர்னல் பானு பிரதாப் சிங் மன்கோடியா மற்றும் லான்ஸ் கார்போரல் தல்ஜித் சிங் ஆவர். காயமடைந்த மேஜர் மயங்க் சுபம், மேஜர் அமித் தீட்சித் மற்றும் கேப்டன் கௌரவ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

Tags:    

Similar News