இந்தியா

மதங்களும், மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன- ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின உரை

Published On 2023-01-25 19:30 IST   |   Update On 2023-01-25 19:51:00 IST
  • அம்பேத்கர் உள்ளிட்ட பல ஆளுமைகள் நமக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
  • நாளைய இந்தியாவை வடிவமைக்க பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள்

புதுடெல்லி:

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குடியரசு தினத்தை கொண்டாடும்போது, ஒரு தேசமாக நாம் எதை அடைந்தோமோ, அதை கொண்டாடுகிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் ஜனநாயக குடியரசாக நாம் வெற்றியடைந்துள்ளோம்.

பல்வேறு விதமான மதங்களும், மொழிகளும் நம்மை பிளவுபடுத்தவில்லை, மாறாக ஒன்றிணைத்துள்ளன. உலகின் மிகச்சிறந்த நாகரிகங்களில் ஒன்று இந்தியா. அம்பேத்கர் உள்ளிட்ட பல ஆளுமைகள் நமக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது. அரசாங்கத்தின் செயல்பாடுகளால் இது சாத்தியமானது. 'ஆத்மநிர்பர் பாரத்' முயற்சி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவை வெறும் கோஷங்கள் அல்ல. சமீப ஆண்டுகளில் இந்த லட்சியங்களில் நாம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். நாளைய இந்தியாவை வடிவமைக்க பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

Tags:    

Similar News