ரேணுகாசாமி கொலை வழக்கு: ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம் - நடிகர் தர்ஷன் மீண்டும் கைது
- கர்நாடக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
- மொத்தம் 7 குற்றவாளிகளின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் அவரது காதலி பவித்ரா கவுடா ஆகியோரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த வழக்கில் இருவருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, ஜாமீன் வழங்க சரியான சட்டப்பூர்வ காரணங்கள் இல்லை என கூறி அதை ரத்து செய்தது.
பிரபலம் என்ற அடிக்கப்படையில் ஜாமீன் வழங்கினால் மக்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கை கெட்டுவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மைசூரில் தர்ஷன் கைது செய்யப்பட்ட்டார். பவித்ரா கவுடா பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் காவலில் எடுக்கப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 7 குற்றவாளிகளின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.