இந்தியா

ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு... ரூ. 23 ஆக உயர்கிறது கட்டணம்

Published On 2025-03-28 17:59 IST   |   Update On 2025-03-28 17:59:00 IST
  • கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.-ஐ 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய்ம் பிடித்தம் செய்யப்படும்.

வங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன. கார்டு மூலம் பணம் எடுத்தல், ஸ்டேட்மென்ட் உள்ளிட்டவைகளுக்கு ஏ.டி.எம். இயந்திரத்தை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.

Tags:    

Similar News