இந்தியா

2024க்கு பிறகு மாற்றத்தை ஏற்படுத்தும் ஐந்து மாநிலங்கள் - சஞ்சய் ராவத்

Published On 2023-04-07 13:22 GMT   |   Update On 2023-04-07 13:22 GMT
  • 2024-க்குப் பிறகு நாட்டில் அதிகார மாற்றம் நிச்சயம் இருக்கும் என சஞ்சய் ராவத் கூறினார்.
  • சீனாவின் ஊடுருவல்கள் இருந்தபோதிலும் மத்திய அரசு ஏன் மவுனமாக இருக்கிறது என்றார்.

மும்பை:

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவின் உதவியாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாற்றம் ஏற்படும். மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

சீனாவின் ஊடுருவல்கள் இருந்தபோதிலும், மத்திய அரசு ஏன் மவுனமாக இருக்கிறது?

2024 க்குப் பிறகு நாட்டில் அதிகார மாற்றம் நிச்சயம் இருக்கும். இதை நான் மிகவும் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

இந்து, முஸ்லிம் கலவரங்களைத் தூண்டிவிட்டு, தேர்தல் ஆதாயங்களுக்காக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலையை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் உண்மையான சக்தியாக இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் சீனா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பா.ஜ.க.வின் இந்துத்துவா போலியானது என தெரிவித்தார்.

Tags:    

Similar News