இந்தியா

இந்தியர்கள் புகழ்மிக்க பாரம்பரியத்தை அறியாமல் இருப்பதற்கு அந்நிய ஆட்சியே காரணம்- ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

Published On 2022-12-24 16:50 GMT   |   Update On 2022-12-24 16:50 GMT
  • கலாச்சார மற்றும் ஆன்மீக மரபு ஆகியவை இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.
  • கடந்த காலத்தில் இந்தியாவின் ஆன்மீக, அறிவுசார் மேலாதிக்கத்தை சர்வதேச அளவில் ஏற்றுக்கொண்டனர்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடுனில், ஸ்வாமி ராம் ஹிமாலயன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, 300 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சியானது, இந்தியர்கள் தங்கள் புகழ்பெற்ற பாரம்பரியங்களைப் பற்றி அறிந்து கொள்வதைத் தடுத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கு, நாட்டின் சிறப்புமிக்க கடந்த காலம், அதன் சிறந்த கலாச்சார மற்றும் ஆன்மீக மரபு ஆகியவை தொடர்பான வலுவான விழிப்புணர்வு இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் இந்தியாவின் ஆன்மீக மற்றும் அறிவுசார் மேலாதிக்கத்தை சர்வதேச அளவில் இயல்பாக ஏற்றுக்கொண்டனர் என்றும், பல்வேறு அறிவுத் துறைகளில் இந்தியாவின் பாதையை உடைக்கும் பங்கை ஒப்புக்கொண்ட சீன அறிஞர்களையும் ராஜ்நாத் சிங் மேற்கோள் காட்டினார்.

சீன அறிஞர்களில் ஒருவரை மேற்கோள் காட்டி பேசிய அவர், "இருபடி சமன்பாடு, இலக்கணம் மற்றும் ஒலிப்பு முறை ஆகியவற்றில் இந்தியா சீனாவின் ஆசிரியராக இருந்தது" என்றார்.

Tags:    

Similar News