இந்தியா

வெளிநாட்டில் இந்தியாவை இழிவுபடுத்துவதாக ராகுல்காந்தி மீது காங்கிரஸ் மந்திரியின் மகன் விமர்சனம்

Published On 2023-03-09 08:00 IST   |   Update On 2023-03-09 08:00:00 IST
  • விஷ்வேந்திர சிங் மகன் அனிருத் ராகுல்காந்தியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
  • மந்திரி விஷ்வேந்திர சிங் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஜெய்ப்பூர் :

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அதில், சுற்றுலாத்துறை மந்திரியாக விஷ்வேந்திர சிங் பதவி வகித்து வருகிறார்.

அவருடைய மகன் அனிருத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அவர் முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கு நெருக்கமானவர். அவர் கூறியிருப்பதாவது:-

ராகுல்காந்தி, மற்றொரு நாட்டின் நாடாளுமன்றத்தில் தனது சொந்த நாட்டை இழிவுபடுத்துகிறார். ஒருவேளை, அவர் இத்தாலியைத்தான் தனது தாய்நாடாக நினைக்கிறார் போலும்.

அவர் இந்தியாவில் இந்த குப்பைகளை பேச முடியாதா? அவர் மரபணுரீதியாக ஐரோப்பிய மண்ணுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கு மந்திரி விஷ்வேந்திர சிங் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News