இந்தியா
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு
- மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை மொரீசியஸ் பிரதமர் இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:
மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையே சிறப்பு ஆயுஷ் மையம், ஹெலிகாப்டர்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதற்கிடையே, துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணனை மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று சந்தித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.