இந்தியா

ஜனாதிபதி திரவுபதி முர்மு

காமன்வெல்த் - ஜூடோவில் பதக்கம் வென்றவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Published On 2022-08-01 18:41 GMT   |   Update On 2022-08-01 18:54 GMT
  • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் உள்ளது.

புதுடெல்லி:

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் ஜூடோவில் இந்தியாவின் சுஷிலா தேவி வெள்ளியும், விஜய்குமார் யாதவ் வெண்கலமும் வென்றனர்.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டியின் ஜூடோவில் வெள்ளி வென்ற சுஷிலா தேவி, வெண்கலம் வென்ற விஜய்குமாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் சுஷிலா தேவி, உங்களையும் உங்கள் பதக்கங்களையும் நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சுஷிலா தேவி லிக்மாபாமின் சிறப்பான பங்களிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். அவர் குறிப்பிடத்தக்க திறமை மற்றும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இதேபொல், ஜூடோவில் வெண்கலம் வென்ற விஜயகுமாருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்குமார் யாதவ் காமன்வெல்த் போட்டியின் ஜூடோவில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி இந்தியாவின் எதிர்கால விளையாட்டுக்கு நல்ல முன்னோடியாக உள்ளது. வரும் காலங்களில் அவர் வெற்றியின் புதிய உயரங்களைத் தொட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

Tags:    

Similar News