இந்தியா
null

ஜனாதிபதியின் அசாம் பயணம் ரத்து

Published On 2025-04-24 07:56 IST   |   Update On 2025-04-24 09:41:00 IST
  • ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று மாலை, அசாம் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக செல்ல இருந்தார்.
  • அசாம் மாநில கவர்னர் மாளிகைக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி:

ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று மாலை, அசாம் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக செல்ல இருந்தார்.

நாளை நடக்கும் மாநில அரசு விழாவில், நடன கலைஞர் சோனல் மான்சிங்குக்கு விருது வழங்க இருந்தார். கவுகாத்தி பல்கலைக்கழக 32-வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்ள இருந்தார்.

ஆனால், காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக ஜனாதிபதி தனது அசாம் பயணத்தை ரத்து செய்து விட்டார்.

இதுதொடர்பாக அசாம் மாநில கவர்னர் மாளிகைக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பிரதமா் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு இன்று பயணம் மேற்கொண்டு ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பிரதமரின் கான்பூா் பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News