இந்தியா

பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி - உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முடிவு

Published On 2023-03-23 04:18 IST   |   Update On 2023-03-23 04:23:00 IST
  • பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி அடுத்த மாதம் ஒலிபரப்பாக உள்ளது.
  • இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

Tags:    

Similar News