இந்தியா

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது மனைவி உஷாவை வரவேற்ற பிரதமர் மோடி

Published On 2025-04-21 20:10 IST   |   Update On 2025-04-21 20:20:00 IST
  • 4 நாள் பயணமாக ஜே.டி. வான்ஸ் இந்தியா வந்துள்ளார்.
  • பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார்.

அமெரிக்க துணை அதபிர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ளார். இத்தாலில் இருந்து இன்று காலை இந்தியா வந்தடைந்தார். அவருக்கு அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தன்னுடைய அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளை பிரதமர் மோடி வரவேற்றார்.

அமெரிக்க அதிபர் ஜே.டி. வான்ஸ் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்திருக்கிறார். அவரது மனைவியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா, 3 குழந்தைகள் ஆகியோருடன் வந்துள்ளார். டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் அவர்கள் வந்த விமானம் 9.45 மணிக்கு தரை இறங்கியது. அரசு சார்பில் அவர்களுக்கு முறையான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு மரியாதைதான், பரதநாட்டிய கலை நிகழ்ச்சியையும் வான்ஸ் தம்பதி கண்டு களித்தது.

துணை அதிபர் வான்ஸ் உடன் அமெரிக்க உயர் அதிகாரிகள் 4 பேர் வந்துள்ளனர். டெல்லி விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் வான்ஸும், அவரது குடும்பத்தினரும் டெல்லியில் உள்ள நாராயண் அக்ஷர்தாம் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் வழிபாடுகள் செய்தனர்.

இந்தியாவில் 4 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வான்ஸ் திட்டமிட்டுள்ளார். இன்று காலை அவர் நாராயண் ஆலயத்தில் வழிபாடு முடித்ததும் டெல்லியில் உள்ள பாரம்பரிய இந்திய கைவினை பொருட்கள் விற்பனை வளாகத்துக்கு சென்றார். அங்கு விற்கப்படும் பாரம்பரிய பொருட்களை பார்த்து ஆச்சரியப்பட்டார். பிற்பகலில் அவரை இந்திய அதிகாரிகள் குழு சந்தித்து பேசுகிறது.

இதைத்தொடர்ந்து இன்று இரவு அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குழு பிரதமர் மோடி வீட்டுக்கு வருகை தந்துள்ளனர். அங்கு பிரதமர் மோடியும், வான்ஸும் சந்தித்து பேசுகிறார்கள். அதே சமயத்தில் இரு நாட்டு குழுக்களும் சந்தித்து பேச்சு நடத்தும்.

அமெரிக்கா சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் தலைமையிலான குழுவினர் இடம் பெறுவார்கள். இந்தியா சார்பில் பிரதமர் மோடி தலைமையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

பேச்சுவார்த்தையின்போது இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குறிப்பாக இருதரப்பு வர்த்தகம், வரி, ராணுவம், விண்வெளி ஆய்வு ஆகியவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News