இந்தியா

வல்லபாய் படேல் பிறந்த தினம்: மலர் தூவி மரியாதை செலுத்திய ஜனாதிபதி, பிரதமர்

Published On 2023-10-31 03:11 GMT   |   Update On 2023-10-31 03:11 GMT
  • டெல்லியில் சர்தார் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
  • குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி:

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள சர்தார் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, மத்திய மந்திரி மீனாட்சி லேகி உள்பட பலர் பங்கேற்றனர்.

 

இந்நிலையில், குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் தலைவிதியை அவர் வடிவமைத்த அசாதாரண அர்ப்பணிப்பை நாம் நினைவு கூருகிறோம். தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுகிறது. அவருடைய சேவைக்கு என்றென்றும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News