இந்தியா

மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை: பிரதமர் மோடி

Published On 2024-08-20 20:14 IST   |   Update On 2024-08-20 20:14:00 IST
  • மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் இந்தியா வந்துள்ளார்.
  • அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுடெல்லி:

இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து, இந்திய தொழிலாளர்கள் மலேசியாவுக்கு செல்வதை எளிதாக்குவது, மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாங்கள் பரஸ்பர ஒத்துழைப்புக்கான அனைத்து துறைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். இருதரப்பு வர்த்தகம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருவதை நாங்கள் கவனித்தோம்.

இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை இப்போது இந்திய ரூபாய் மற்றும் மலேசிய ரிங்கிட்களில் செயலாக்க முடியும்.

மலேசியாவில் ஆயுர்வேத இருக்கை ஒன்று அமைக்கப்படுகிறது. இது தவிர, மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து சிறப்பு நடவடிக்கைகளிலும் ஒத்துழைத்த பிரதமர் அன்வர் மற்றும் அவரது குழுவினருக்கு முழுமனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

2025-ம் ஆண்டில் ஆசியான் அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்புக்கு இந்தியா முழு ஆதரவையும் அளிக்கும்.

அனைத்து சர்ச்சைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் என்பதற்காக குரல் கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News