இந்தியா

சுபான்ஷு சுக்லாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி

Published On 2025-08-18 19:42 IST   |   Update On 2025-08-18 19:42:00 IST
  • விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பினார் சுபான்ஷு சுக்லா.
  • பயணத்தின்போது 60-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார்.

இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி பிளோரிடாவில் இருந்து புறப்பட்டார். அவர் சென்ற விண்கலம் ஜூன் 25ஆம் தேதி விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. ஜூலை 15ஆம் தேதி பூமிக்கு திரும்பினார்.

இதன்மூலம் விண்வெளிக்கு சென்ற 2ஆவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தற்போதைய இந்த விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனைப் படைத்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, சுபான்ஷு சுக்லாவை தன்னுடைய பிரதம மந்திரி இல்லத்திற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

விண்வெளி ஆய்வு மையத்தில் 60-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார்.

Tags:    

Similar News