இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி உறுதி
- இஸ்ரேலியர்களுக்கு இந்தியர்கள் உறுதுணையாக இருப்பர்.
- எல்லா வகையிலும் பயங்கரவாதத்தை இந்தியா எதிர்க்கும் என்றார்.
புதுடெல்லி:
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால், கோபம் அடைந்த இஸ்ரேல் உச்சக்கட்ட தாக்குதலை நடத்தி வருகிறது. காசா முனை மீது ஏவுகணைகளை தொடர்ந்து வீசி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் இஸ்ரேல் மற்றும் காசா முனையில் பல்வேறு நாட்டினர் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலியர்களுக்கு இந்தியர்கள் உறுதுணையாக இருப்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. எல்லா வகையிலும் பயங்கரவாதத்தை இந்தியா எதிர்க்கும் என பதிவிட்டுள்ளார்.