இந்தியா

ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் ரெயில்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Published On 2023-04-12 12:04 IST   |   Update On 2023-04-12 12:04:00 IST
  • அஜ்மீரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை இந்த ரெயில் இயக்கப்படும்.
  • இந்த ரெயில் ஜெய்ப்பூர், ஆல்வார், குர்கான் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் துவக்க நாளான இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. நாளை முதல் வழக்கமான சேவை தொடங்க உள்ளது. நாளை முதல் அஜ்மீரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் ஜெய்ப்பூர், ஆல்வார், குர்கான் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அஜ்மீரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு 5 மணி 15 நிமிடங்களில் இந்த ரெயில் சென்றடையும். தற்போது அதே வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றடைகிறது. 

இந்த ரெயில், ராஜஸ்தானின் புஷ்கர், அஷ்மீர் ஷரிப் தர்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்துவதுடன், இப்பகுதியில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

Tags:    

Similar News