இந்தியா

பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் சூரிய சக்தி மின்சாரம் பெறும் கிராமம் மோதேரா - பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2022-10-09 22:15 IST   |   Update On 2022-10-09 22:16:00 IST
  • மோதேரா கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் அமைந்துள்ளது.
  • இது 1026-27 காலகட்டத்தில் சாளுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது.

அகமதாபாத்:

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் சென்றார். மோதேராவில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் ரூ. 3,900 கோடி மதிப்பிலான அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது மோதேரா கிராமத்தை இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்மூலம் மோதேரா 24 மணி நேரமும் சூரிய சக்தி மின்சாரம் பெறும் கிராமம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27 காலகட்டத்தில் சாளுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது.

மோதேராவில் உள்ள சூரிய கோவிலுக்கு தொல்லியல் துறையால் பாதுக்காப்படும் 3-டி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் இந்த 3-டி திட்டத்தை பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். இதன்மூலம் சூரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதன் வரலாற்றை அறிய உதவும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மோதேரா இப்போது சூரியகிராமம் என்று அழைக்கப்படும். மோதேராவில் உள்ள மக்கள் சூரிய சக்தியைப் பயன்படுத்திய பிறகு மின்சாரக் கட்டணத்தில் 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சேமிப்பார்கள். இப்போது பொதுமக்கள் தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இனி நாம் மின்சாரத்திற்கு பணம் செலுத்த மாட்டோம், ஆனால் அதை விற்று அதிலிருந்து சம்பாதிக்கலாம் என பெருமிதமுடன் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News