இந்தியா
பவன் கல்யாணுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- பவன் கல்யாண் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
- எண்ணற்ற மக்களின் இதயங்களிலும் பவன் கல்யாண் ஒரு முத்திரையை பதித்துள்ளார்.
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும் நடிகருமான பவன் கல்யாண் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, நடிகர் சிரஞ்சீவி மற்றும் திரை உலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும். எண்ணற்ற மக்களின் இதயங்களிலும் பவன் கல்யாண் ஒரு முத்திரையை பதித்துள்ளார் என்று கூறியுள்ளார்.