null
பிரியாணிதான் டாப்... ஆனால் பீட்சா ஆர்டர் 20 சதவீதம் வரை குறைவு என்கிறது சொமேட்டோ
- 9.13 கோடி பிரியாணி ஆர்டர்கள் செய்யப்பட்டன.
- இந்த வருடம் 5.84 கோடி பீட்சா ஆர்டர்கள் செய்யப்பட்டன.
ஆன்லைன் மூலம் உணவுகள் ஆர்டர் செய்வதில் சொமேட்டோ செயலி முன்னணியாக இருந்து வருகிறது. இந்த செயலி 2024-ல் எவ்வளவு ஆர்டர் செய்யப்பட்டது என்பதை வெளியிட்டுள்ளது.
அதன்படி பிரியாணி கடந்த 8 ஆண்டாக முதல் இடத்தை வகிக்கிறது. பீட்சா 2-வது இடம் வகிக்கிறது. 9.13 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 10.09 கோடியாக இருந்த நிலையில் இந்த வருடம் 95 லட்சம் ஆர்டர்கள் குறைந்துள்ளன.
பீட்சாவுக்காக இந்த வருடம் 5.84 கோடி ஆர்டர்கள் செய்யப்பட்டன. ஆனால் கடந்த வருடம் ஆர்டர் 7.45 கோடியாக இருந்தது. இந்த வருடம் 1.6 கோடி ஆர்டர் குறைந்துள்ளது. 20 சதவீதம் குறைவாகும்.
சமீபத்தில் மற்றொரு ஆன்லைன் ஆர்டர் செயலியான ஸ்விக்கி பிரியாணி அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டதாகவும், 2-வதாக தோசை அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.
சொமேட்டோவில் ஒவ்வொரு இரண்டு வினாடிகளுக்கும் 3 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன. ஸ்விக்கியில் ஒரு வினாடிக்கு 2-க்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.