இந்தியா
குடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கத்தை படத்தில் காணலாம்.
ரூ.42 லட்சம் தங்கத்தை குடலில் மறைத்து கடத்தி வந்த பயணி கைது
- விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் பலத்த சோதனை செய்தனர்.
- ரூ.42 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கேப்ஸ்யூல் வடிவில் விழுங்கி குடலுக்குள் பதுக்கி வைத்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் பலத்த சோதனை செய்தனர்.
இதில் ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடலில் சோதனை செய்தபோது அவர் வயிற்றுக்குள் தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
ரூ.42 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கேப்ஸ்யூல் வடிவில் விழுங்கி குடலுக்குள் பதுக்கி வைத்துள்ளார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அந்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். தங்கத்தை கடத்தி வந்த பயணி ரசாக்கை அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.