இந்தியா

PUBG-க்கு அடிமையானதால் செல்போனை பிடுங்கிய பெற்றோர் - விரக்தியில் 10 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2025-08-22 16:42 IST   |   Update On 2025-08-22 16:42:00 IST
  • விளையாட போதுமான நேரம் இல்லாததால் பள்ளிக்குச் செல்வதை கூட நிறுத்தியுள்ளான்.
  • மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்காக அழைத்துச் சென்றனர்.

தெலுங்கானாவில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி 10 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நிர்மல் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் பேத்தி ரிஷேந்திரா, ரிஷேந்திரா ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக PUBG விளையாட்டில் மூழ்கியுள்ளான்.

விளையாட போதுமான நேரம் இல்லாததால் பள்ளிக்குச் செல்வதை கூட நிறுத்தியுள்ளான். தனது மகனின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட சிறுவனின் பெற்றோர், அவனை மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்காக அழைத்துச் சென்றனர்.

இருப்பினும், ரிஷேந்திராவின் நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. ரிஷேந்திரா மருத்துவரை மிரட்டியதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

விரக்தியடைந்த பெற்றோர், மூன்று நாட்களுக்கு முன்பு ரிஷேந்திராவின் தொலைபேசியை வலுக்கட்டாயமாக பறித்து வைத்துள்ளனர்.

PUBG விளையாட முடியாத விரக்தியில் இருந்த ரிஷேந்திரா நேற்று யாரும் இல்லாதபோது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் குறித்து போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.

PUBG விளையாட்டுக்கு 2022 இல் மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும் 2023 மே மாதத்தில் இந்த தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News