இந்தியா

சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்றவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பி.எஸ்.எஃப்.

Published On 2025-08-11 18:39 IST   |   Update On 2025-08-11 18:39:00 IST
  • ஊடுருவ தயாராக இந்த நிலையில் வீரர்கள் கவனித்தனர்.
  • வீரர்கள் எச்சரிக்கை விடுத்தும் கவனிகாததால், துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் கத்துவா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் காரர்கள் மீது இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் காயம் அடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா மாவட்டத்தின் சந்த்வான், கோதே எல்லை அவுட்போஸ்ட்கள் இடையே உஷார் படுத்தப்பட்ட எல்லை பாதுகாப்புப்படையினர், ஊடுருவ இருந்தவர்களை கவனித்தனர். ஊடுருவல் காரர்களுக்கு பலமுறை வீரர்கள் எச்சரித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால் இந்திய வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஊடுருவ முயன்றவர்களில் ஒருவர் காயம் அடைந்தார்.

குண்டு பாய்ந்த நபர் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அவருடைய அடையாளம், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதற்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில்தான் அவர் ஏன் ஊடுருவ முயன்றார் என்பது தெரியவரும்.

Tags:    

Similar News