இந்தியா

6 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் - வருமான வரித்துறை

Published On 2023-07-30 15:53 GMT   |   Update On 2023-07-30 16:21 GMT
  • வருமான வரி தாக்கலை விரைவாக செய்து முடியுங்கள் என அறிவுறுத்தப்பட்டனர்.
  • இதனால் வருமான வரி தாக்கல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய வருமான வரித்துறை இன்று வெளியிட்டு டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:

2022-23 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாள் ஜூலை 31-ந்தேதி ஆகும்.

இன்று மாலை 6.30 மணி வரை சுமார் 6 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமானோர் தாக்கல் செய்துள்ளார்கள்.

இன்று மட்டும் சுமார் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.

வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதற்காக வரி செலுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என பதிவிட்டுள்ளது.

Tags:    

Similar News