இந்தியா
கட்டிட அனுமதிக்கு விண்ணப்பத்தவரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
- கண்ணூர் மாவட்டம் பையனூர் பேரூராட்சியில் கட்டிட ஆய்வாளராக பணிபுரிபவர் பிஜூ.
- லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விண்ணப்பதாரர் புகார் செய்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் பேரூராட்சியில் கட்டிட ஆய்வாளராக பணிபுரிபவர் பிஜூ. இவரிடம் பையனூர் பகுதியை சேர்ந்த ஒருவர், புதிதாக கட்டப்பட்ட தனது வீட்டுக்கு கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
கட்டிட அனுமதி சான்றிதழ் தருவதற்கு அந்த விண்ணப்பதாரரிடம்,ரூ.25 ஆயிரம் லஞ்சம் தருமாறு கட்டிட ஆய்வாளர் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விண்ணப்பதாரர் புகார் செய்தார். அவர்களது கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கட்டிட ஆய்வாளர் பிஜூவிடம் அவரது அலுவலகத்துக்கு சென்று வழங்கினார். அப்போது அவரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்பு அவரை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.