பல சிறுவர்களை மிரட்டி வலுக்கட்டாயமாக தகாத உறவு: கொடூரனுக்கு 25 வருட சிறைத்தண்டனை
- சிறுவனை ஒதுக்குபுறமான இடத்திற்கு அழைத்து சென்று தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.
- சிறுவனின் பெற்றொர் புகார் அளிக்க, ஏராளமான சிறுவர்களுக்கு எதிராக தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பல சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை (sexually assault) கொடுத்த நபருக்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி 25 வருடம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் 21ஆம் தேதி சிறுவனை குற்றவாளி ஒதுக்குபுறமான இடத்திற்கு தூக்கிச் சென்று அவனுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். அந்த சிறுவன், தகாத உறவுக்கு மறுப்பு தெரிவிக்க, அடித்து உதைத்ததுடன் இது தொடர்பாக வெளியில் கூறினால் கொலை செய்வதாக மிரட்டியுள்ளான். ஆனால், அந்த சிறுவன் நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 23ஆம் தேதி பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் வெளியில தெரியவர, அந்த கிராமத்தில் உள்ள ஏராளமான சிறுவனை குற்றவாளி தனியாக அழைத்துச் சென்று தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அத்துடன் கற்பழிப்பு வழக்கில் ஜெயிலில் இருந்துள்ளார்.
போலீசார் குற்றவாளியை மார்ச் 27ஆம் தேதி கைது செய்தனர். அவர் மீது ஏப்ரல் 8ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நீதிபதி 25 வருட சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.