இந்தியா

ராணுவ வாகனம் மீது குண்டு வீச்சு- உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Published On 2023-04-21 18:14 GMT   |   Update On 2023-04-21 18:14 GMT
  • பூஞ்ச் தாக்குதலுக்கு ஜெய்ஷ் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.
  • வீரரின் குடும்பத்தினருக்கு முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தேசிய ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து தெரியவந்தும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர்.

இதற்கிடையே பூஞ்ச் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பினர் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த பூஞ்ச் தாக்குதலுக்கு ஜெய்ஷ் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவரான ஒடிசாவை சேர்ந்த லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வாலின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

மேலும், லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வாலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News