இந்தியா

குஜராத் சட்டசபை தேர்தலில் 'நோட்டா' ஓட்டு சரிவு

Published On 2022-12-10 03:25 GMT   |   Update On 2022-12-10 03:25 GMT
  • குஜராத்தில் பா.ஜ.க. தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.
  • இந்த தேர்தலில் நோட்டா வாக்குகள் 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

புதுடெல்லி :

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சாதனை வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது. இந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நோட்டா ஓட்டுகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டா, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட எந்தவொரு வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்று கூறி அவர்களை நிராகரிக்கும் வகையில் கடைசியில் இடம்பெறுகிற சின்னத்தில் பதிவு செய்கிற வாக்கு ஆகும்.

இந்த சட்டசபை தேர்தலில் நோட்டாவுக்கு 5 லட்சத்து ஆயிரத்து 202 ஓட்டுகள் விழுந்துள்ளன. மொத்த வாக்குகளில் இது 1.5 சதவீதம் ஆகும். கடந்த 2017 தேர்தலில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 5 லட்சத்து 51 ஆயிரத்து 594 ஆகும். இத்துடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் நோட்டா வாக்குகள் 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

இந்த தேர்தலில் அதிகபட்சமாக கேத்பிரம்மா தொகுதியில் நோட்டாவுக்கு 7 ஆயிரத்து 331 ஓட்டுகள் விழுந்தன. தண்டா தொகுதியில் 5 ஆயிரத்து 213 வாக்குகளும், சோட்டா உதய்பூரில் 5 ஆயிரத்து 93 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.

Tags:    

Similar News