இந்தியா

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் வெற்றி: சவுத்ரி பதவி விலகினார்

Published On 2024-02-12 08:43 GMT   |   Update On 2024-02-12 11:11 GMT
  • பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்
  • 125 பேர் ஆதரவும், 112 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது

பீகார் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து இருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியிலிருந்து திடீரென விலகி, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

இன்று நிதிஷ் குமாரின் ஆட்சி மீதான நம்பிக்கை குறித்து முடிவாக உள்ள நிலையில், முன்னதாக சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரி (Awadh Bihari Choudhary) மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிர்த்து 112 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதனையடுத்து தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுத்ரி பதவி விலகினார்.

Tags:    

Similar News