இந்தியா

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனைகள் நிகத், நீது பைனலுக்கு முன்னேற்றம்

Published On 2023-03-23 15:47 GMT   |   Update On 2023-03-23 15:47 GMT
  • 50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஜரீன், கொலம்பியாவின் இங்ரித் வாலன்சியாவை வீழ்த்தினார்.
  • 48 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தில் நீது கங்காஸ், கஜகஸ்தான் வீராங்கனையை வென்றார்.

புதுடெல்லி:

டெல்லியில் நடைபற்று வரும் மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனைகள் நிகத் ஜரீன், நீது கங்காஸ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

50 கிலோ எடைப்பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான நிகத் ஜரீன், கொலம்பியாவின் இங்ரித் வாலன்சியாவை 5-0 என வீழ்த்தினார். இதேபோல் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான அரையிறுதியில் நீது கங்காஸ், கஜகஸ்தான் வீராங்கனை அலுவா பால்கிபெகோவாவை 5-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். 

Tags:    

Similar News