இந்தியா

அஜ்மீர் தர்கா

உதய்பூரில் தையல்காரர் கொடூர கொலை செய்யப்பட்டதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம்

Update: 2022-06-28 22:15 GMT
  • தாலிபானிச மனப்பான்மையை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
  • எந்த மதமும் மனிதகுலத்திற்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதில்லை.

ஜெய்ப்பூர்:

உதய்பூரில் தையல்காரர் கண்கையா லால் இரண்டு நபர்களால் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக அஜ்மீர் தர்கா தீவான் ஜைனுல் அபேதீன் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

எந்த மதமும் மனிதகுலத்திற்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதில்லை என்றும், இஸ்லாம் மதத்தில், அனைத்து போதனைகளும் அமைதிக்கான ஆதாரங்களாக செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நமது தாய்நாட்டில் தாலிபானிச மனப்பான்மையை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் ஜமியத் உலமா-இ-ஹிந்த் பொதுச்செயலாளர் மௌலானா ஹக்கிமுதீன் காஸ்மியும் உதய்பூர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை யார் செய்திருந்தாலும் அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இது நாட்டின் சட்டத்துக்கும் நமது மதத்துக்கும் எதிரானது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News