இந்தியா

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் படங்கள்

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற தொழிலாளி பணிநீக்கம்

Published On 2022-07-17 23:17 GMT   |   Update On 2022-07-17 23:17 GMT
  • உ.பி.யில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பிரதமர், உபி முதல் மந்திரி படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்றுள்ளார்.
  • இதையடுத்து அந்தத் தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டார்.

லக்னோ:

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

இதை கண்ட சிலர் அதை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். உடனே அந்த ஒப்பந்தத் தொழிலாளியின் வேலை பறிபோனது. அவரை பணிநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது.

உ.பி.யின் மதுரா நகர், நிகாமில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் குப்பை வண்டியில் பிரதமர் மோடி மற்றும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் படங்களை எடுத்துச் சென்றுள்ளார்.

இதை கண்ட சிலர் அதை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். உடனே அந்த ஒப்பந்தத் தொழிலாளியின் வேலை பறிபோனது. அவரை பணிநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது.

விசாரணையில், அந்த ஒப்பந்தத் தொழிலாளி பிரதமர் மற்றும் சில தலைவர்களின் படங்களைத் தவறுதலாக குப்பை வண்டியில் எடுத்துக் கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது என மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Tags:    

Similar News